பத்து பைசா இல்லாமல் நடித்துக் கொடுக்கிறேன் என்ற விஜய் ஆண்டனி.. உடனே சுளீர்னு வந்த பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியதன் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் விஜய் ஆண்டனி. அதன் பிறகு நடிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தினால் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவருடைய இயல்பான நடிப்பிற்காகவே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. வித்தியாசமான கதை களங்களை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விஜய் ஆண்டனி அதிக கவனம் செலுத்துவார்.

இன்னிலையில் கோடியில் ஒருவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இலவசமாக ஒரு படத்தை நடித்து கொடுக்கப் போவதாக கூறியுள்ளார். டிசம்பர் மாதத்திற்குள் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் முடித்துவிட்டு அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு படத்தை நடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

இதனை நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான டி. சிவாவிடம் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது தற்போது மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. என்னவென்றால், தற்போது கோலிவுட்டில் இரண்டு தமிழ் சங்கம் இருப்பதால், விஜய் ஆண்டனி எந்தத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இலவசமாக படம் நடித்துக் கொடுக்க உள்ளார் என்பதாகும்.

ஆகையால் இதைப்பற்றி டி. சிவாவிடம் செய்தியாளர் கேட்ட போது, ‘1000 உறுப்பினர்களை கொண்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஜய் ஆண்டனி தனது படத்தை இலவசமாக நடித்துக் கொடுக்கட்டும். எங்களுக்கு வேண்டாம்’ என்று நிராகரித்துள்ளார். இந்த செய்தியானது தற்போது திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.