பத்து தல படத்துக்கு வரும் புது பிரச்சனை.. எல்லாம் சிம்புவால் வந்த வினை

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சிம்பு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம் தான் பத்து தல. எப்பவோ ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் கொரோனா பிரச்சினையின் காரணமாக தற்போது தான் பரபரப்பாக படமாகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கூடிய விரைவில் இந்த படத்தை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு குழு படு மும்முரமாக வேலை பார்த்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது. அதாவது பல மாதங்களுக்கு முன்பு படமாக்கப்பட்ட இந்த கதையில் ஆரம்பத்தில் நடிகர் சிம்பு குண்டு பூசணிக்காய் போல இருந்தார். அதன் பிறகு படப்பிடிப்பு நடக்காமல் பல மாதங்கள் இப்படம் முடங்கியது.

அந்த இடைவெளியில் சிம்பு தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி விட்டார். அதிகமாக இருந்த தன்னுடைய உடல் எடையை பல உடற்பயிற்சிகளை செய்து அவர் வெகுவாக குறைத்து விட்டார். இதனால் அவர் ஆள் அடையாளம் தெரியாமல் அட்டகாசமாக மாறிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

தற்போது இது தான் பத்துதலை படக்குழுவிற்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அதாவது சிம்பு குண்டாக இருந்த போது எடுக்கப்பட்ட காட்சிகளை என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழு முழித்து வருகிறது.

இதே போன்ற ஒரு சிக்கலை தான் மாநாடு படத்திலும் இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்தார். ஆனால் அவர் சிம்புவின் குண்டாக இருந்த தோற்றத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து மாற்றி படத்தை ரிலீஸ் செய்தார். இந்நிலையில் பத்து தல படத்தின் தயாரிப்பு நிர்வாகம் இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.