பணத்தாசையில் விஜய் சேதுபதி.. எப்பவும் பழச மறக்க கூடாது பாஸ்

விஜய் சேதுபதி ஆரம்பத்தில் நடித்த படங்களில் திரையில் இருப்பதை யாரும் கவனித்து இருக்கா மாட்டார்கள். ஏனென்றால் அவர் தொடக்கத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தான் மிகப் பெரிய நடிகராக மாறியுள்ளார். மேலும் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் படியான ஹீரோவாக வளர்ந்துள்ளார்.

மேலும் தற்போது படு பிசியான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். ஆரம்பத்தில் விஜய் சேதுபதி திரையரங்குகள் மூலம் தான் மக்களிடம் பிரபலமானார். மேலும் அனைவரும் திரையரங்குகளில் தான் படத்தை வெளியிட வேண்டும் எனவும் கூறிவந்தார்.

ஆனால் கொரோனா காலகட்டத்தில் தலைதூக்கிய ஓடிடி தளத்தில் தான் தற்போது விஜய்சேதுபதி படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தச் சமயத்தில் விஜய் சேதுபதி அதிகப் படங்களில் நடித்து ஓடிடியில் வெளியிட்டு வந்தார். ஆனால் பெரிதாக எந்த படமும் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓடிடியில் வெளியானதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படவில்லை.

இதனால் தற்போதும் விஜய் சேதுபதி ஓடிடியில் படங்களை வெளியிடுவதை விரும்பி வருகிறார். ஏனென்றால் தற்போது ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்ப்பது ஓடிடி இதுதான். வீட்டிலேயே படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு அலுப்பு ரசிகர்களுக்கு வந்துள்ளது.

மேலும் தங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் உடனே அதில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்ற சௌகரியமும் உள்ளதால் ஓடிடியை விரும்புகிறார்கள். இதனால் தற்போது விஜய்சேதுபதி திரையரங்குகளை தாண்டி ஓடிடிகே முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

இதனால் விஜய் சேதுபதி மீது திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். மேலும் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படமும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.