பட வாய்ப்பிற்காக நெருக்கம் காட்டும் பிரிய பவனி சங்கர்.. பரிதவிக்கும் 10 வருட காதலன்

புதிய நடவடிக்கையால் குழம்பிப் போன காதலர் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வரும் அனைத்து நடிகைகளும் வெற்றிக்கனியை பறிப்பது கிடையாது சில நடிகைகளுக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் கிடைக்கும். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தில் இருப்பவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் வந்த பிரியா பவானி சங்கர் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரின் துரு துரு பேச்சும், அழகும் இவருக்கு பெரிய திரையில் வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.

மேயாத மான் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இவர் அதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், பிளட் மணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அந்த வகையில் இவர் தற்போது கைவசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை வைத்துள்ளார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஓமணப் பெண்ணே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதிலிருந்து இவர் அந்தப் படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாணுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். பொது இடங்களிலும், பட விழாக்களிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு வருகின்றனர். அதில் இருவரும் மீடியாவுக்கு ஜோடியாக போஸ் கொடுப்பது கேலி கிண்டல் செய்வது என்று கலகலப்பாக இருக்கும் வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் சற்று குண்டாக இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது தன் உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துக் கொண்டிருப்பதால் சதாசர்வகாலமும் ஜிம்மிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார். அப்படி அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள், போட்டோக்கள் என்று அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மேலும் தன்னுடைய அழகை மெருகேற்றும் முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருவதால் ஜிம் கோச் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கிறாராம். அதிலும் இவர் இடுப்பு தெரியும்படியாகவும், கிளாமராக உடை அணிந்தும் பல போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

இத்தகைய அவருடைய போக்கினால் பிரியாவின் நெடுநாள் காதலர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியா ஒருவரை காதலித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்போது அவர் ஹரிஷ் கல்யாண், ஜிம் கோச் இவர்களுடன் அதிக நெருக்கம் காட்டி வரும் செய்திகள் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மனமுடைந்து போன காதலர் அதற்கான காரணம் தெரியாமல் குழம்பி வருவதாக கோடம்பாக்கத்தில் சலசலக்க படுகிறது.