பட பூஜைக்கு முன்னரே கல்லா கட்டும் தளபதி 66.. சாட்டிலைட் உரிமத்தை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

தளபதி விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில் இந்த படத்திற்கான சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 70 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்தின் உரிமையையும் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

இதற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே விஜய்யுடன் பைரவா, சர்க்கார் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தளபதி 66 திரைப்படத்திலும் இணைய இருக்கிறார்.

விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என கூப்பிட இப்படி ஒரு காரணமா.? பாசத்துக்கு அடிமையான கதை

விஜயகாந்த் தற்போது உடல் நலத்தை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் தற்போது வரை அவர் நலம் பெற்று திரும்பவும் சினிமாவுக்கு வர வேண்டும் என காத்திருக்கின்றனர். ஏனென்றால் விஜயகாந்த் ...