படு கேவலமாக நடந்து கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்.. குப்பை கிடங்காக மாறிய இணையதளம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு நடிகர்களின் ரசிகர்கள் இடையே போட்டி நிலவும். ஆரம்பத்தில் எம்ஜிஆர், சிவாஜி அதற்கு அடுத்தபடியாக ரஜினி, கமல் ரசிகர்கள் இடையே மிகுந்த போட்டி நிலவியது. தற்போது விஜய், அஜித் ரசிகர்களிடையே போட்டி இருந்தாலும் அதை மிகவும் மோசமாக கையாளுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக ஒரு கூட்டமும், அஜித்துக்கு எதிராக ஒரு கூட்டமும் மீம்ஸ்கள் போட்டு வருகிறது. அதில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், வயதான தோற்றம், சொட்டையாக இருக்கும் புகைப்படங்களை விஜய், அஜித் ரசிகர்கள் மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர். RIPJosephVijay Aids_Patient_Ajith ஆகிய ஹாஷ்டாக்கை தற்போது ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களையும் கேவலப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் விஜய், அஜித் இரு குடும்பங்களும் நண்பர்களாகத்தான் உள்ளனர். ஒரு நல்ல சினிமா ரசிகர் என்பவர் தனக்குப் பிடித்த நடிகராக இருந்தாலும், பிடிக்காதவர் நடிகராக இருந்தாலும் விமர்சனங்கள் செய்யலாம்.

ஆனால் அவர்களைக் உருவ கேலி செய்து புகைப்படம் வெளியிடுவது மிகவும் தவறான செயலாகும். தங்களுக்கு பணம் கிடைக்கிறது, மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடுத்தவர்களை கேவலப்படுத்துவது மிகவும் தரக்குறைவான செயல் ஆகும்.

அதுமட்டுமல்லாது யாராவது திருட்டு மற்றும் பல வழக்குகளில் சிக்கினால் அவர்களை அஜித் அல்லது விஜய் ரசிகர்கள் என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தவறு செய்தால் அதனுடைய முழுப்பொறுப்பும் அவர்தான் காரணம். அதை விட்டுவிட்டு இவருடைய ரசிகர் அதனால்தான் இப்படிச் செய்தார் என்பது முட்டாள்தனமான விஷயமாகும்.

அஜித் மற்றும் விஜய் இருவரும் தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்குப் பல உதவிகள் செய்து வருகிறார்கள். இது போன்ற விஷயங்களை அவர்களது ரசிகர்கள் பகிராமல் அவர்களை அவமானப்படுத்தும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருவது விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே பிடிக்காத விஷயம் ஆகும்.