நடிகையாக இருந்து பின் தொகுப்பாளராக மாறியவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவருடைய தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு ஏன் யாருக்கும் பேட்டி கொடுக்காத நயன்தாரா கூட டிடி பேட்டி எடுத்தால் மட்டும் தான் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பார்.

அப்படி பல நட்சத்திரங்களுக்கும் ஃபேவரைட் தொகுப்பாளினியாக இருக்கிறார். டிடி சினிமா வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வலம் வந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இல்லை. ஆசை ஆசையாய் காதலித்து தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்ட அடுத்த சில வருடங்களிலேயே அவருடன் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

அந்த நேரத்தில் டிடியின் கணவர் டிடி இரவு பார்ட்டிகளுக்கு அதிகமாக செல்வதால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லாமல் மறைமுகமாக பல பேட்டிகளில் சொல்லியிருந்தார். இவர்களுடைய விவாகரத்திற்கு முழுக்க முழுக்க காரணம் ஈகோ தான் என்கிறார்கள் அவர்களுடைய நட்பு வட்டாரங்கள்.

அதன்பிறகு தொலைக்காட்சிகளில் கவனம் செலுத்தி வந்த திவ்யதர்ஷினிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலும் விஜய் டிவி களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது முக்கியமான நிகழ்ச்சி என்றால் தனது பங்களிப்பை கொடுத்து விடுகிறார்.

டிடி திருமணத்திற்கு பிறகு செம மாடலாக மாறி விட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கவர்ச்சி உடை அணிந்த கூட போட்டோஷூட் நடத்தியுள்ளார். அப்படி ஒரு உடையில் அவருடைய மறைக்கப்பட வேண்டிய பகுதி வெளியில் தெரிந்ததை பார்த்த நெட்டிசன்கள் அதை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.