படுக்கை அறை போட்டோவை மோசமாக விமர்சித்த ரசிகர்கள்.. ஓட்டம் பிடித்த அட்லி மனைவி பிரியா

நாளுக்குநாள் பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களை பார்த்தாலே நமக்கு எரிச்சல் தான் வருகிறது. பணம் காசு இருக்கிறவர்கள் நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடுவதை கூட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக வெளியிட்டு பலரையும் புண்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. வெளியில் சொல்லும் அளவுக்கு இதையெல்லாம் பெரிய விஷயங்கள் இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது.

அதிலும் பிரபலங்களின் வீட்டில் மனிதர்களைவிட விலங்குகளுக்கு தான் மரியாதை ஜாஸ்தி என்பதை அவர்கள் வெளியிடும் புகை படங்களிலேயே நன்றாக தெரியும். அதுமட்டுமில்லாமல் தங்கள் கணவருடன் ரகசியமாக இருக்கும் புகைப்படங்களையும் நாங்கள் இப்போது ரொமான்ஸ் செய்யப் போகிறோம் என்பதையும் சொல்லி விட்டே செய்கிறார்கள் இந்த கால பிரபலங்கள்.

கணவன் மனைவி என்று வந்துவிட்டாலே ஊடல் கூடல் சண்டை சச்சரவு என எல்லாமே இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் வீடியோவாக வெளியிட்டால் நன்றாக இருக்குமா என்ன. அப்படி ஒரு செயலை தான் தற்போது அட்லி மனைவி பிரியா செய்துள்ளார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அவரை கண்டபடி சமூக வலைதளங்களில் வச்சு செய்து விட்டனர்.

அட்லியும் அவரது மனைவி பிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் எப்போதுமே ரொமான்ஸ் ஜோடி களாகவே இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் படுக்கையறையில் அட்லி மனைவியின் மடியில் படுத்திருந்த புகைப்படத்தை பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இது கணவன் மனைவிக்குள் இருக்கும் பாசம் தான். ஆனால் இதை போட்டோவாக படம் பிடித்து வெளியிட வேண்டுமா என்ன. இதனால் ரசிகர்கள் கடுப்பாகி ப்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டபடி கமெண்ட்டுகளை அள்ளி வீச உடனடியாக கமெண்ட் போடும் பாக்சை ஆப் செய்துவிட்டு ஓடிவிட்டார் பிரியா அட்லி.

நீங்கதான் தைரியமான ஆளாச்சே எங்கே கமெண்ட் பக்கத்தை ஓபன் செய்யுங்கள் பார்ப்போம் என அவருடைய வேறு சில சமூக வலைதள பக்கங்களில் அவருக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வருகின்றனர் நம்முடைய ரசிகர்கள். இதையெல்லாம் பார்க்கும்போது தனக்கு தானே நல்ல ஆப்பாக செய்து கொண்டு அதன் மேல் உட்கார்ந்து கொண்ட கதைதான்.