தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவருடைய சினிமா கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் அல்லு அர்ஜுன் சேர்ந்து நடித்த ‘அலவைகுண்டபுரம்’.

இந்த படத்திற்கு பிறகு தான் இவரைத் தேடி படவாய்ப்புகள் வரத் தொடங்கியது. எனவே இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜுனுக்கு, சிறந்த நடிகைக்கான விருது பூஜா ஹெக்டேக்கும்,

சிறந்த இசையமைப்பாளர் விருது தமன் அவர்களுக்கும், அதைப்போல் சிறந்த இயக்குனருக்கான விருது திரிவிக்ரம் என்பதற்கும், சிறந்த தயாரிப்பாளர் விருது ராதாகிருஷ்ணனுக்கும் கிடைத்தது.

எனவே விருது பெற்ற பூஜா ஹெக்டே தனது வீட்டின் படுக்கை அறையில் விருதுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், ‘அதிகாலை 4 மணிக்கு எழுந்து உழைப்பதற்காக கிடைத்த பரிசுதான் இந்த விருது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் பூஜா ஹெக்டே அணிந்திருக்கும் மஞ்சள் நிற உடையை பார்த்த ரசிகர்கள், ‘மஞ்சக் காட்டு மைனா’ வர்ணிக்கின்றனர்.

மேலும் விருது வாங்கியதற்காக தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் தங்களுடைய வாழ்த்துக்களை பூஜா ஹெக்டேவுக்கு தெரிவிக்கின்றனர்.