படம் ப்ளாப் ஆனாலும் 10 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்.. தலைதெறிக்க ஓடும் தயாரிப்பாளர்

ஒரு சமயத்துல மாப்பிள்ளை பார்க்க போனாலே மாப்பிள்ளை அந்த ஹீரோ மாதிரி இருக்கனும்னு தான் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தமிழ் சினிமால பிரபலமான நடிகரா வலம் வந்தவர் தான் நடிகர் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கத்துல வெளியான தளபதி படம் மூலம் தமிழ் சினிமால அறிமுகமானவர் தான் அரவிந்த் சாமி.

முதல் படமே இவருக்கு நல்ல அறிமுகம் இருந்ததால தமிழ் சினிமால மடமடவென வளர்ந்து வந்து முன்னணி நடிகரா உச்சம் தொட்டார். இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது. நல்லா டாப் ஹீரோவா வலம் வந்து சமயத்துல திடீர்னு சில சொந்த பிரச்சனை காரணமா சினிமால இருந்து விலகி படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

பின்னர் சில கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதுவும் அவரது ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் தான் ரீ என்ட்ரி ஆனார். தொடர்ந்து பல படங்களில் வில்லன், கதாநாயகன் என நடித்து அசத்தி வருகிறார். இறுதியாக இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமாக மிகவும் பிரம்மாண்டமாக வெளியான தலைவி படம் தோல்வியையே தழுவியது. எதிர்பார்த்த வசூல் இப்படத்திற்கு கிடைக்காததால் படம் வியாபார ரீதியாக தோல்வியடைந்த படமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரவிந்த் சாமி புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என கேட்கிறாராம்.

பிளாப் படத்தில் நடித்துவிட்டு இவ்வளவு சம்பளமா என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் கேட்டால் புத்திசாலித்தனம், ஸ்டைல் ஹன்ட்சம் தான் 10 கோடி சம்பளத்திற்கு காரணம் என கூறி வருகிறாராம். இந்த காரணத்தை கேட்டு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கடுப்பில் உள்ளார்களாம்.

மாமாவை மலைபோல் நம்பிய அருண் விஜய்.. யானை பலத்துடன் இருந்தவருக்கு அடுத்தடுத்து விழும் அடி

ஹரி, அருண் விஜய் கூட்டணியில் முதல்முறையாக உருவான படம் யானை. ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா, அம்மு அபிராமி, ராஜேஷ், ...