விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சூழலில் தங்களுடைய படத்தின் புரமோஷனுக்காக 2 சினிமா பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளனர். இந்த தகவல் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் தற்போது ஹாட் ஸ்டாரில் வெளிவரவிருக்கும் படம் ‘ஓ மணப் பெண்ணே’. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் நடிகை பிரியா பாவனி சங்கர் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர்கள் இந்த படத்திற்கான விளம்பரத்திற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கிறார்கள் என்றும், இவர்கள் வரும் காட்சிகளெல்லாம் வருகின்ற எபிசோடில் வரும் என ரசிகர்களால் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்

அதைப்போன்று ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமடைந்த நிலையில், தற்போது சீசன்5 மீண்டும் வருகை தரவுள்ளார். ஹரிஷ் கல்யாண் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கி, அதன் பிறகு தனுசு ராசி நேயர்களே, பியார் பிரேமா காதல், காதலிக்க நேரமில்லை என தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஹரீஸ் கல்யாணின் சினிமா துறையில் நல்ல முன்னேற்றம் கண்ட நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நல்ல பெயர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆகையால் பிக் பாஸ் சீசன் துவங்கப்பட்ட சில நாட்களிலே,யே வெளியில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு பிரபலங்கள் வந்துள்ளது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.