படத்திற்கு பீஸ்ட் என பெயர் வைக்க காரணம்.. சுவாரசியத்தை போட்டுடைத்த பூஜா ஹெக்டே

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அண்மையில் இப்படத்தில் விஜய்யின் பெயர் வீரராகவன் என ரசிகர்களுக்கு தெரியவந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு பீஸ்ட் என பெயர் வைக்க காரணம் என்ன என்பதைப் பற்றி பூஜா ஹெக்டே கூறியுள்ளார். விஜய் படத்தின் டைட்டில்கள் அப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அல்லது கதையுடன் ஒன்றி இருக்கும்.

சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பூஜா ஹெக்டே, நெல்சன், அனிருத் மூவரும் கலந்து கொண்டனர். அப்போது பீஸ்ட் என பெயர் வைக்க காரணம் என்ன என பூஜா ஹெக்டேவிடம் கேட்டுள்ளனர். இப்படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தில் விஜய் அமைதியாக இருப்பார், திடீரென அவருக்குள் இருக்கும் பீஸ்ட் வெளியே வரும்.

இவர் பத்து செகண்டுக்கு முன் இப்படி இல்லையே என எல்லோருக்கும் தோன்றும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் இருக்கும். இதனால்தான் இப்படத்துக்கு பீஸ்ட் என பெயர் வைத்திருக்கிறார்கள் என்று பூஜா ஹெக்டே கூறினார். இதனால் இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் விஜய் சன் டிவிக்கு அளித்த பேட்டியின் மூலம் பீஸ்ட் படத்தின் சில தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பூஜா ஹெக்டேவும் தற்போது படத்திற்கான அப்டேட்களை கொடுத்து வருகிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.