பஞ்சு டயலாக் பேசினா மட்டும் பத்தாது தளபதி.. பீஸ்ட் படம் முழுக்க ஆக்கிரமித்து அந்த ஒரு விஷயம்

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. விஜய் ஒருவருக்காக மட்டும் இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் விஜய் என்ற ஒற்றை மனிதனால் மட்டும்தான் இந்தப் படம் ஓடும் எனவும் அவர் தான் படத்தை பல இடங்களில் தாங்கி நிறுத்தி இருக்கிறார் எனவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இயக்குனர் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்த ரசிகர்கள் தற்போது அவர் தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை தவற விட்டு உள்ளதாக கூறி வருகின்றனர்.

அதேபோல் படத்தில் இடம் பெற்றுள்ள பல வசனங்களும் கைதட்டல் பெற்று வருகிறது. அதில் விஜய் ஹிந்தி மொழியை பற்றி ஒரு இடத்தில் குறிப்பிட்டுப் பேசுவார். அதாவது அவர் ஒரு காட்சியில் உனக்கு வேணும்னா தமிழ்ல பேச கத்துக்கிட்டு வா ஒவ்வொரு முறையும் ஹிந்தியில ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது என கூறுவார்.

இந்த வசனம் படத்தில் மிகப்பெரிய அளவில் கைத்தட்டல்களை பெற்று அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இந்த வசனம் குறித்து ஊடகங்களில் பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். அதிலும் தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு இந்த வசனம் மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும் கருத்துக்கள் வெளியாகி உள்ளது.

இவ்வளவு பாராட்டுக்கள் இந்த வசனத்திற்கு கிடைத்தாலும் படத்தை பார்த்த பலரும் ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்துள்ளனர். அதாவது படத்தில் இப்படி ஒரு வசனத்தை வைத்து விட்டு படம் முழுக்க ஹிந்தி மொழி ஆக்கம் வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற வசனமெல்லாம் படத்தில் மட்டும் தானா என்று தயாரிப்பாளருக்கு எதிராகவும் கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் விஜய் இதைப்பற்றி எதுவும் கேட்கவில்லையா அல்லது தயாரிப்பாளரின் வற்புறுத்தல் தான் காரணமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இப்படி பல முரண்பாடுகள் படத்தில் இருப்பதால்தான் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.