பசங்களை கடத்தும் ஸ்கூல் டீச்சர்.. செம்ம மெசேஜ் சொல்லும் ‘எ தர்ஸ்டே’ விமர்சனம்

யாமி கவுதம், அதுல் குல்கர்னி, நேஹா துபியா, டிம்பிள் கபாடியா நடிப்பில் டிஸ்னி ஹாட் ஸ்டார் மல்டிப்ளக்சில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ள படம் A Thursday .

கதை  – பிளே ஸ்கூல் நடத்தும் டீச்சர் யாமி கவுதம். திடீர் என ஒருநாள் அங்குள்ள 16 குழந்தைகளை கடத்தி விட்டதாக போலீசுக்கு போன் செய்கிறார். துப்பாக்கி வைத்து வானில் நோக்கி சுடுகிறார். அதுல் குல்கர்னியிடம் தான் பேசுவேன் என கோரிக்கை வைக்கிறார். அவர் வந்தவுடன் முதல் கோரிக்கையாக ஒரு மணிநேரத்தில் 5 கோடி கேட்கிறார்.

போலீஸ் உள்ளே புகுந்து என்கவுண்டர் செய்ய முயற்சி எடுக்க ஒரு மாணவனை லைவ் ஸ்ட்ரீமிங்கில் சுடுகிறாள். அடுத்ததாக பிரதம மந்திரியுடன் போனில் பேச வேண்டும் என சொல்கிறாள். டிம்பிள் கபாடியா போனில் பேச, நேரடியாக சந்திக்க வேண்டும் என அடுத்த டிமாண்ட் எழுப்புகிறாள்.

இறுதியில் தான் யாமி கவுதம் எதற்காக இதனை செய்கிறாள் என்பது நமக்கு புரிய வருகிறது. ஒரு வியாழன் அன்று அவளது கோரிக்கையான கற்பழிப்பு குற்றம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை என்ற சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

சினிமாபேட்டை அலசல் – திரில்லர் ஜானர் படம், இரண்டு மணிநேரம் போர் இல்லாமல் செல்கிறது படம். சொல்ல வந்த மையக்கருத்தை அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.5 / 5