நேருக்கு நேராக கலாய்த்த வனிதா.. பொறுமை இழந்து கோபப்பட்ட விஜய்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு நம்பிராஜன் இயக்கத்தில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தளபதி விஜயின் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார்.

குடும்பத்துடன் ஏற்பட்ட சொத்து தகராறு மூலம் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வந்த இவர், பிக்பாஸில் கலந்துக் கொண்டு இன்னும் அலப்பறையை கூட்டினார். தற்போது மனோபாலவுடன் ஒரு பேட்டியில் பேசிய போது, நடிகர் விஜயை குறித்து சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

நானும் விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவும் உறவுக்கார்கள் என்பதால் எப்பொதும் பட ஷீட்டிங்கில், அனைவரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருப்போம். அப்போது வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்த விஜய்யிடம் நான் “நீ பின்நாளில் பெரிய சூப்பர்ஸ்டாராக வருவாய் என கூறினேன். அதற்கு விஜய் நீ என்னை கலாய்க்குறிய என கேலி செய்தார்.

பின்னர் ஒரு முறை பத்திரிகை ஒன்றில் என்னை பற்றி தவறான கருத்துகள் எழுதப்பட்டிருந்தது. அப்போது ஷீட்டிங்கில் விஜய்யிடம் நான் அதை பற்றி புலம்பிக் கொண்டிருந்தேன். அமைதியாக இருந்த விஜய் கொஞ்ச நேரம் கழித்து பொறுமை இழந்து உனக்கு என்னதான் பிரச்சினை, உன் பற்றி பேசுகிறார்கள் என்றால் நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாய் என அர்த்தம். இல்லை யாரும் உன்னை கண்டுக்காமல் இருந்தால் நீ இறந்து விட்டாய் என அர்த்தம். இப்போது உனக்கு இது புரியாது என கூறி தேற்றினார்” என கூறினார் வனிதா.

உண்மையில் விஜய் மிகுந்த புத்திசாலி அப்போது அவர் கூறியது எனக்கு புரியவில்லை, இப்போது தான் புரிகிறது எனவும் கூறினார். வனிதா இந்த பேட்டியில் இயக்குனர் செல்வமணி மற்றும் ரோஜாவை பற்றியும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

சந்திரலேகா படத்திற்கு தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் எதுவும் பெரிய வெற்றி பெற்றவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பின்னர் 2015ஆம் ஆண்டு எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தையும் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து வனிதா தற்போது பிஸியாக வலம் வருகின்றார். அதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் கலந்துகொண்டார் வனிதா. அந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டார். அதன் பின் பல பட வாய்ப்புகள், நிகழ்ச்சி வாய்ப்புகள், பிசினஸ் என பிஸியாக மாறிவிட்டார். தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருந்தார் வனிதா.