நெல்சன்க்கு கடிவாளம் போட்ட சன் பிக்சர்ஸ்.. சூப்பர் ஸ்டார் எடுக்கப்போகும் அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக பேசப்படும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் நெல்சன். இவரது வளர்ச்சி யாரும் நினைத்துப் பார்க்காத ஏன் அவரே நினைத்து பார்க்காத அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவரது திறமை. மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து வந்த இயக்குனர் நெல்சன்.

முதலில் சிம்புவை தொடங்கப்பட்ட திரைப்படம் தடைப்பட்ட பொழுது மனரீதியாக அதிர்ஷ்டம் இல்லை என்று ஒதுங்கி மீண்டும் தொலைக்காட்சிக்கு சென்றார். பின்னர் நல்ல நட்பின் அடிப்படையில் நல்ல நேரம் தொடங்கியது. அந்த நட்பின் மூலம் நயன்தாராவிடம் கதைசொல்லி படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார். படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இது அர்த்தமான படமாக பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

வெற்றியின் சந்தோஷம் அடங்குவதற்குள் சிவகார்த்திகேயன் வைத்து டாக்டர் படம் தொடங்க வாய்ப்பு வந்தது. இதுவும் நட்பின் அடிப்படையில். கொரோனா காலகட்டத்தில் உருவான இந்த படம் சில மாதங்கள் இடைவெளியில் வெளிவந்தது. படம் வெளிவருவதற்கு முன்னரே பாடல்கள் அனைவரும் ரசிக்கப்பட்டது. படம் வெளிவந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

மகிழ்ச்சியில் இருக்கும் பொழுது யாரும் எதிர்பார்க்காத ஒரு வாய்ப்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை நாயகனாக வைத்து பீஸ்ட் படத்திற்கு இயக்கும் வாய்ப்பை பெற்றார். இது அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்தக் கூட்டணி அறிவித்ததில் இருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. இந்தப் பீஸ்ட் படத்திற்கு வரும் சின்ன சின்ன அறிவிப்புகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியது.

ஒருவழியாக பாடல்கள் வெளிவந்த வந்தன யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு பிரம்மாண்ட வெற்றி பெற்றது. பின்னர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது அதுவும் வரவேற்கப்பட்டது. ஏப்ரல் 13 படம் வெளிவந்தது வெளிவந்த முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற்று. ரசிகர்களின் ஏமாற்றத்தில் படம் தோல்வியை ஏற்படுத்தியது.

தினம் தினம் தோல்வியை பற்றி பேசி நெல்சன் அடுத்த படைப்பு ரஜினிகாந்துடன் சன் பிக்சர்ஸ் இணைந்து உருவாக்கிய தலைவர் 169 பிரச்சனை ஏற்பட வாய்ப்பாக அமைந்தது. சன் பிக்சர்ஸ் ரஜினியிடம் உங்களுக்கு பிடித்தால் நெல்சனை வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் இறுதியாக இயக்குனர்களை தருகிறோம் அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த இயக்குனர்கள் அட்லி, தேசிங்கு பெரியசாமி இப்படி சொல்ல. இதனை எதிர்பார்க்காத நெல்சனுக்கு என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்