சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். அண்ணாத்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அண்ணாத்த படம் திரையிடப்பட்டது. இப்படம் அண்ணன், தங்கை பாசத்தை வெளிக்காட்டும் படம் என்பதால் குடும்பத்துடன் வந்து பார்த்தார்கள்.

இப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை வைத்தார்கள். இப்படம் திருப்பாச்சி, சிவகாசி, விஸ்வாசம் போன்ற எல்லா படங்களின் கலப்படம், சீரியல் பார்ப்பது போலிருந்தது, படம் முழுவதும் பிஜிஎம் என நெகட்டிவ் கமெண்ட்களை அடுக்கிக் கொண்டு சென்றார்கள்.

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ரஜினி அண்ணாத்த படத்தில் இளமையாக உள்ளார் என்றும் சண்டைக் காட்சிகளில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார் என்றும் பாராட்டினார்கள். பல நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டியும் திரையரங்குகள் எங்கும் மக்கள் வெள்ளம் சூழ்ந்து இருந்தார்கள்.

தீபாவளி என்றாலே படம் பார்ப்பதை ரசிகர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். அதிலும் சூப்பர் ஸ்டார் படம் தீபாவளி அன்று வெளியாவதால் குடும்பத்துடன் மக்கள் திரையரங்குகளுக்கு வந்த அண்ணாத்தை படத்தை பார்த்தார்கள். அண்ணாத்த படம் முதல்நாளே கிட்டத்தட்ட 34 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

விமர்சன ரீதியாக தோல்விகளைச் சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது அண்ணாத்த. ஆண்களுக்கு நிகராக பெண்களும் இரவு காட்சிகளில் படத்தை பார்த்து வருகின்றனர். தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.