நீண்டநாள் காதலியுடன் விரைவில் திருமணம்.. வயசு ஆயிட்டே போறதால சஸ்பென்ஸை உடைத்த விஜய் டிவி பிரபலம்

விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் ஷோவான குக் வித் கோமாளி மூலம் அனைவரையும் கவர்ந்தவர் புகழ். அவர் இதற்கு முன்பு பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டுமே அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

இதனால் புகழ் தற்போது சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். அதோடு புகழ் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை பற்றிய ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புகழ் அவருடைய காதலியுடன் இருக்கும் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் வெங்கடேஷ் பட், தாமு உள்ளிட்டோர் புகழின் காதல் கதையை பற்றி கேட்டுள்ளனர்.

இதற்கு வெட்கத்துடன் பதிலளித்த புகழ், சுமார் ஐந்து வருடங்களாக பென்சியை காதலித்து வருகிறேன் என்று கூறினார். விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பிருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் எனக்கு பல சமயங்களில் பக்கபலமாக இருந்துள்ளார்.

மேலும் குக் வித் கோமாளியில் ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷாவுடன் புகழ் செய்த பல காதல் அட்டகாசங்களை பார்த்தும் அவருடைய காதலி தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு நடுவர்கள் திருமணம் எப்போது என்று கேட்டனர்.

எப்படியும் இந்த வருடத்திற்குள் திருமணம் முடித்து விடுவேன் என்று புகழ் பதிலளித்து அரங்கத்தையே அதிர வைத்தார். தற்போது புகழ் திருமண பந்தத்தில் இணைய உள்ள இந்த செய்தி அவருடைய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி ஆக்கியுள்ளது.