நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு அலறவிட்ட பீஸ்ட் பட நடிகை.. முண்டியடித்து லைக் போடும் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட் இப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தை பற்றி படக்குழுவினர் எந்த ஒரு அப்டேட் வெளியிடாமல் இருந்தனர்.

ஆனால் தொடர்ந்து பீஸ்ட் படத்தினை பற்றி அப்டேட்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட விஜய் மாலில் எடுக்கப்பட்ட காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் சட்டையில் ரத்தக்கறையுடன் இருப்பதால் கண்டிப்பாக ஏதோ ஒரு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது எனக் கூறி வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படத்தில் அரபு மொழி கலந்த ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது அது கூடிய விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகின. மேலும் படத்தின் சண்டை இயக்குனரான அன்பு அறிவு இருவரும் விஜயின் சண்டைக்காட்சிகள் கண்டிப்பாக காட்சிகளை ரசிகர்களுக்கு பிடிக்கும் என கூறியிருந்தனர்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாகவும் மலையாள நடிகையான அபர்ணா தாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருடைய பீஸ்ட் படத்தின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று படப்பிடிப்பு எதுவும் கிடையாது என பதிவிட்டு நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் படப்பிடிப்பு முடிந்துள்ளது என கூறி வருகின்றனர். மேலும்தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.