பொதுவாக நாம் விடுமுறை நாட்களை கழிப்பதற்கு ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வோம். இன்னும் சிலரோ அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் நடிகர் மற்றும் நடிகைகள் அவர்களின் விடுமுறை நாட்களை கழிக்க அழகிய தீவுகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

அதிலும் சமீபகாலமாக பெரும்பாலான நடிகைகளின் தேர்வு மாலத்தீவாகவே உள்ளது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று மாலத்தீவின் அழகு மற்றொன்று மாலத்தீவில் நடிகைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள். அட ஆமாங்க செலிபிரிட்டிகளுக்கு மாலத்தீவில் சில சலுகைகள் வழங்குறாங்க. அதனால் தான் நடிகைகள் அனைவரும் அங்கு படையெடுத்து வருகிறார்கள்.

ஆனால் அதில் ஒரு டிவிஸ்ட் உள்ளது. அதன்படி நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எத்தனை மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கிறார்களோ அதற்கேற்றாற் போல் தான் உணவு, தங்கும் இடம், வந்து போகும் செலவு என அனைத்திலும் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

இதுதவிர நடிகைகள் இவற்றை முற்றிலும் இலவசமாகவும் அனுபவிக்கலாம். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் மாலத்தீவின் அழகை புகைப்படம் எடுத்து அவர்களின் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட வேண்டும். தற்போது இதை தான் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே செய்து வருகிறார்.

ஆம் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு விடுமுறையை கொண்டாட மாலத்தீவு சென்றுள்ள பூஜா ஹெக்டே தாறுமாறாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதில் பிகினியும் அடங்கும், மாலத்தீவின் அழகோடு சேர்த்து தன் அழகையும் காட்டி வரும் பூஜா ஹெக்டே மாலத்தீவில் சும்மா மஜாவா போட்டோ எடுத்து இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.