நீச்சல் உடையில் தெரிக்கவிட்ட வித்யுலேகா ராமன்.. கணவருடன் வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் வித்யூலேகா ராமன். தற்போது தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் இவரது மார்க்கெட் உச்சத்தை சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு குண்டாக இருப்பதால் இவரை வைத்து பல நடிகர்கள் கிண்டல் செய்து காமெடி செய்து வந்தனர்.

ஆனால் சினிமா என்பதால் பெரிதும் எடுத்துக்கொள்ளாத வித்யுலேகா ராமன் சமூக வலைதளத்தில் அதிகமாக கேலி கிண்டலுக்கும் உருவகிக்கும் ஆளானது தான் சோகமான விஷயம். அதிலும் இவர் உடல் பருமன் அதிகம் இருந்த போது மாடர்ன் உடைகளில் புகைப்படம் வெளியிட்டதால் நெகடிவ் விமர்சனங்கள் அதிகம் வந்தது.

இதனால் கஷ்டப்பட்டு ஜிம் யோகா என சென்று தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறிவிட்டார். தன்னை பற்றி கேலி செய்தவர்களுக்கு தான் கொடுத்த பதிலடி என அப்போதே சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமா நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார் வித்யூலேகா ராமன்.

திருமணம் செய்ததில் இருந்து தற்போது வரை ஹனிமூன் என கணவருடன் நாடு நாடாக சுற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அங்கே பிகினி உடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை சமூகவலைதளத்தில் வெளியிட்டும் வருகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா.

பசியிலிருந்து உனக்கு பிரியாணி பொட்டலம் கிடைத்தது போல இஷ்டத்திற்கு வித்யூலேகாவின் புகைப்படத்துக்கு கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். கண்டிப்பாக ஹனிமூன் முடிந்து வரும் வித்யூலேகா இந்த நெகட்டிவ் விமர்சனத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

படப்பிடிப்பில் மோசமான ஆட்டிட்யூட்.. கேரியரை தொலைத்த ஸ்ருதி ஹாசன்

சினிமா துறையில் நடிப்பில் ஜாம்பவானாக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். அவருக்கு சுருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். அவர்களும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். அதில் கமல்ஹாசனின் மூத்த ...