நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மறைக்கப்பட்ட அஜித் பெயர்.. வசமாக மாட்டிய விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் ஒரு செங்கலை கூட நகர்த்த முடியாது என்று தான் கூற வேண்டும். இவர்கள் இல்லாமல் படப்பிடிப்பு நடத்த இயலாது. இவ்வாறு 24 அமைப்புகள் கொண்ட மிகப்பெரிய தொழிலாளர் கூட்டமைப்பு தான் பெப்சி அமைப்பு.

இவர்கள் அனைவருக்குமே ஒரு நாள் படப்பிடிப்பு நடந்தால் தான் வருமானம் கிடைக்கும். இவ்வாறு வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு நடிகர்களுக்கு மேக்கப் போடும் தொழிலாளர் ஒரு நாள் வேலை இழப்பைச் சந்தித்தாலும் வாடகை கொடுக்க முடியாத சூழல் உருவாகும்.

இப்படிப்பட்ட தொழிலாளர்களின் நலன்களுக்காக பெப்சி ஊழியர் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி அடுக்குமாடி கட்டிடம் கட்ட உள்ளனர். இதற்காக நடிகர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு திரைப்படம் நடித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக நடிகர் விஜய் சேதுபதி நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இதை முன்னிட்டு அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்திற்கு விஜய் சேதுபதி டவர்ஸ் என பெயர் வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் பெயர்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. விஜய் சேதுபதி பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சியின் போது பின்புறம் விஜய் சேதுபதி டவர்ஸ் மற்றும் அஜித் டவர்ஸ் என்ற பெயர் கொண்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

இதில் விஜய் சேதுபதி டவர்ஸ் புகைப்படம் மட்டும் தெளிவாக தெரிந்ந நிலையில், அஜித் டவர்ஸ் புகைப்படம் சற்று மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். ஒரு டவருக்கு இவ்வளவு அக்கப்போரா?

பட பூஜைக்கு முன்னரே கல்லா கட்டும் தளபதி 66.. சாட்டிலைட் உரிமத்தை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

தளபதி விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ...