நிறை மாதத்தில் மாடியின் உச்சியில் குத்தாட்டம் போடும் வெண்பா.. அதுவும் இந்தப் பாட்டுக்கு!

பரபரப்பாக 600வது எபிசோடில் அடி எடுத்து வைக்கும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியலின் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் ஃபரினா ஆசாத். இந்த நாடகத்தில் இவரின் வில்லத்தனமான அனைத்து சூழ்ச்சிகளும் காண்பவர்களை கடுப்பேற்றி வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தற்போது இந்த ஃபரினா கர்ப்பமாக இருக்கிறார். ஆனாலும் இவரை அந்த சீரியலின் வில்லி கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதற்கு இயக்குனர் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். ஃபரினாவிற்கு மட்டும் க்ளோசப் வைத்து அனைத்து சீன்களையும் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

இவர் கற்பம் தரித்த நாள் முதல் பலவிதமான போட்டோஷூட்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ரவிவர்மா ஓவியத்திற்கு இவர் கொடுத்துள்ள போஸ் வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. வித்தியாசமான யோசனைகளைக் கொண்டு போட்டோஷூட் எடுக்கப்பட்டு வருகிறது. வயிற்றின் மீது மருதாணியால் வரைந்து தண்ணீருக்குள் மூழ்கி வைத்திருப்பது போன்ற போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளது.

என்னதான் இவரே இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கருத்து தெரிவித்தாலும் இந்த சீரியலின் இயக்குனர் அதை ஏற்க மறுக்கிறாராம். அந்த அளவிற்கு இந்த சீரியலின் வில்லி கதாபாத்திரம் ஃபரினாவிற்கே பொருந்தி வருவதாக நம்புகிறாராம் இந்த நாடகத்தின் இயக்குனர்.

தற்போது ஃபரினா டான்ஸ் ஆடுவது போல் வெளியிட்டுள்ள வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் ஹிந்தி பாடலான ‘சிக்னி சமேலி’ என்ற குத்து பாடலுக்கு மாடியின் உச்சியில்  ஃபரினா குத்தாட்டம் போட்டுள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் ஃபரினா, ரேமா அசோக் என்கின்ற மற்றொரு நடிகையுடன் இணைந்து நடனம் ஆடியபடி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இதுபோன்று நடனமாடுவது தேவையில்லாத வேலை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.