முன்பெல்லாம் திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே போட்டோ எடுப்பது வழக்கம். ஆனால் இப்போது போர் அடித்தால் போதும் உடனே போட்டோ ஷூட் செய்து விடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் தங்கள் திருமணத்திற்கு முன்னும், பின்னும் போட்டோ ஷூட் செய்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். தற்போது கர்ப்ப கால போட்டோ ஷூட் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி இருப்பவர் நடிகை நீலிமா ராணி. இவருக்கு அதிதி என்ற ஒரு மகள் உள்ளார். தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கும் நீலிமா நிறைமாத வயிற்றுடன் போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

அதில் நீலிமா கோவில் போன்ற செட்டப்பில் வித்தியாசமாக புடவை அணிந்து தாமரையின் மீது அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். நீலிமாவின் இந்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சில காலங்களுக்கு முன்பு வரை பெண்கள் தங்களுடைய கர்ப்பத்தை குறிப்பிட்ட நாள் வரை வெளியில் சொல்லாமல் இருப்பார்கள். குழந்தை பிறக்கும் வரையில் தங்களுடைய வயிற்றை பிறருக்கு காட்ட மாட்டார்கள். ஆனால் இப்போது குழந்தை பிறப்பு என்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது.

இதே போன்று நடிகை பரீனாவும் தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வந்தார். தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீலிமாவும் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.