நிரூப் தேவையில்லாமல் இந்த 2 கிறுக்குகலோட சேர்ந்து பெயரை கெடுத்துக்காத.. இந்த வார குறும்படம் ரெடி!

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தற்போது ரசிகர்களுக்கு பிடித்தமான சுவாரசியமான ஆட்டத்தை ஆட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த தலைவர் போட்டிக்காக நடைபெற்ற டாக்கில் தரமான சம்பவம் நிகழ்ந்தது.

பிக்பாஸ் வீட்டில் இதுவரை ஒழுங்காக விதிமுறைகளை பின்பற்றிய இசைவணி, பவானி ரெட்டி, சிபி, ராஜு இவர்களுடன் வீட்டில் கடந்த வாரம் ஜொலித்த இமான் அண்ணாச்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

அப்போது சிபி பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அபிஷேக் மற்றும் பிரியங்காவும் முடிவெடுத்து போட்டியாளர்களையும் அவருக்கே ஆதரவை அளிக்க மூளைச்சலவை செய்தனர்.

அவ்வாறே சிபி, பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரானார். அதன் பிறகு ராஜுவிடம் சென்று அபிஷேக் ராஜா மாற்றி பேசியது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த இரண்டு நிகழ்வுகளும் நடைபெறும்போது நிரூப்-பும் பிரியங்கா மற்றும் அபிஷேக் உடன் இருந்ததை பார்த்த நெட்டிசன்கள் ‘தேவையில்லாமல் இந்த 2 கிறுக்குகலோட சேர்ந்து பெயரை கெடுத்துக்காத நிரூப்’ என்று ஆதங்கப்படுகின்றனர்.

அத்துடன் பிரியங்கா மற்றும் அபிஷேக் செய்த இந்த கேவலமான செயலை கமல் பார்த்தால் நிச்சயம் குறும்படம் காண்பிக்க வாய்ப்புண்டு என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்,

வாடிவாசல் ஷூட்டிங் ஒத்திவைப்பு.. வெற்றிமாறனின் லூட்டியால் உருவான காரணம்

வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் உருவாகயிருந்த வாடிவாசல் திரைப்படம், மேலும் இரண்டு வருடங்கள் தள்ளி போனதற்கான காரணம் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படப்பிடிப்பிற்காக ஆயத்தமாகி வருகிறார். மேலும் சிறுத்தை சிவா ...