நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று.. தப்பிப் பிழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்ட இங்கிலாந்து அணி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்தது.

இந்நிலையில் இரண்டாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 45 ரண்களும், பேன்டன் 25 ரன்களும் மொயின் அலி 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். கிறிஸ் ஜார்டன் 15 பந்துகளில் 27 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணிக்கு ஒரு வலுவான இலக்கை அமைத்துக் கொடுத்தார்.

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடக்கத்திலிருந்தே தடுமாறியது. மொயின் அலி, ஆதில் ரஷித் சுழலில் சிக்கிய அந்த அணி 98 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அகேல் உசைன், செஃபர்ட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் கடைசி ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.

சாகிப் முகமது வீசிய கடைசி ஓவரில் ஹூசைன், இரண்டு பவுண்டரிகள், 3 ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார். அதுமட்டுமின்றி இரண்டு ரன்கள் எக்ஸ்ட்ராவாக கிடைத்தது. இதனால் மேற்கிந்தியத் திவுகள் அணி கடைசி ஓவரில் 28 ரன்கள் சேர்த்து, 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டது. எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்த இங்கிலாந்து அணிக்கு மிகுந்த சவாலை அளித்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

முருகதாஸுக்கு வாய்ப்பு தர மறுக்கும் அஜித்.. என்ன காரணம் தெரியுமா

அஜித் பொதுவாக தனக்கு வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு முறை, இரு முறை, மூன்று முறை கூட வாய்ப்புகளை வாரி வழங்குவார். அப்படி இருக்க தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கொண்டு வந்த ...
AllEscort