நிஜ வாழ்க்கையில் இருந்து ஈர்க்கப்பட்ட 3 படங்கள்.. பாலாஜி சக்திவேலின் அற்புத படைப்புகள்

நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வுகள் அல்லது செய்தித்தாள்களில் படிக்கும் விஷயங்கள் அல்லது சிலரது உண்மைச் சம்பவங்களை கதையாக எடுத்து வெற்றி கண்டவர் பாலாஜி சக்திவேல். இவர் பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இவருடைய படங்கள் பெரும்பாலும் நேர்மையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அவ்வாறு பாலாஜி சக்திவேல் உடைய அற்புதப் படைப்புகளை பார்க்கலாம்.

காதல் : பரத் மற்றும் சந்தியா இருவருக்குமே அறிமுகப்படம் காதல். இப்படம் மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக வசூலை பெற்றது. இப்படத்தின் கதையை பாலாஜி சக்திவேல் தன்னுடன் ரயிலில் பயணித்த ஒரு நண்பர் சொன்ன உண்மை கதையை வைத்து எடுத்திருந்தார். ஃபிலிம்ஃபேர் 2004 ஆம் ஆண்டு சிறந்த திரைப்படம் என்ற விருதை காதல் படம் பெற்றது.

கல்லூரி : 2000 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் 45 மாணவ மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து எரிக்கப்பட்டது. இந்தச் தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தை தனது கல்லூரி படத்தில் எடுத்திருந்தார் பாலாஜி சக்திவேல். இப்படத்தை ஷங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. மேலும், விமர்சன ரீதியாக இப்படம் பாராட்டை பெற்றது.

வழக்கு எண் 18/9 : செய்தித்தாள்களில் வந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம்தான் வழக்கு எண் 18/9. வசதியான காமகாதல் ஒன்றால் வசதியற்ற ஒரு காதல் ஜோடிகளுக்கு ஏற்படும் மிகக் கொடூரமான சம்பவமே இப்படத்தின் கதை. பாலாஜி சக்திவேல் மிக துணிச்சலாக இப்படத்தின் கதையை எடுத்திருந்தார். மேலும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டும் கிடைத்தது.

இப்படி நிஜ வாழ்க்கையிலிருந்து தத்ரூபமாக பல படங்களை தமிழ் சினிமாவிற்கு அற்புதமாக கொடுத்துள்ளனர். அந்த வகையில் இந்த மூன்று படங்களும் மக்களிடம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.