நாளை இரண்டு முக்கிய நிகழ்வுகள்.. ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

கொரோனாவின் காரணமாக இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அக்டோபர் 25 நாளை இந்த விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது. ஒன்று மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை நாளை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது.

மற்றொன்று என் மகள் சௌந்தர்யா விசாகன் அவர் சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ஹூட் என்கிற ஆப்பை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார்.

அதில் மக்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் கருத்துகளை தங்களது சொந்த குரலில் எந்த மொழியிலும் தெரிவிக்கலாம். இந்த முயற்சியை எனது குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன். இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கணவன் செய்த துரோகம்.. சுந்தரி எடுக்கப்போகும் அதிரடி முடிவு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களை கவர்வதற்காக கதையில் பல விறு விறுப்புகளை கூட்டி வருகிறது. அதில் ...