நாயகன் பட குழந்தை நட்சத்திரம் ஞாபகம் இருக்கா.. பின் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை

மணிரத்னம் இயக்கத்தில் 1987ல் வெளியான திரைப்படம் நாயகன். இப்படம் மும்பையில் பிரபல தாதாவாக விளங்கிய வரதராஜ் முதலியாரின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் கமலஹாசன், சரண்யா பொன்வண்ணன், நாசர், ஜனகராஜ் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நாயகன் படத்தில் கமலஹாசன் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் உள்ள நீங்க நல்லவரா, கெட்டவரா என்ற வசனம் இன்றளவும் எல்லோராலும் பேசப்படுகிறது. நாயகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை வினோதினி.

இப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வினோதினி பல படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருந்தார்.

நடிகர் விசு தான் முதன்முதலில் வினோதினியை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்துள்ளார். அதன்பிறகு விசு உடன் ஏழு படங்களில் பணியாற்றியுள்ளார் நடிகை வினோதினி. பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக வினோதினி நடித்திருந்தார்.

பிரபல நட்சத்திரமாக திகழ்ந்த இவர் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளாராம்.

AllEscort