நான் கண்டிப்பாக அந்த வாசலை தேடி போவேன்.. செய்திகளால் கடுப்பான சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா. தற்போது காத்துவாக்குல 2 காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற டுடுடு பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரு பக்கம் சினிமாவில் வெற்றி கண்டு வந்தாலும் வாழ்க்கையில் தோல்வி அடைந்து வருவதாக சமந்தாவை பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முதலில் சமூக வலைதள பக்கத்தில் குடும்ப பெயரை நீக்கிவிட்டு சமந்தா s என தனது பெயரை சமூக வலைதளப் பக்கத்தில் வைத்தார். இதனை பார்த்த ஒரு சிலர் நாக சைதன்யாவிற்கும்,  சமந்தாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

அதன் பிறகு சமூக வலைதள பக்கத்தில் செய்திகளை நாயுடன் ஒப்பிட்டு அதற்கு பதிலடி கொடுத்திருந்தார். விவாகரத்து பற்றிய செய்திகள் வெறிபிடித்து நாய்போல் சமூகவலைதளத்தில் பரவுவது போல் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இருப்பினும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சமந்தாவின் விவகாரத்தை பற்றிய வதந்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் சமீபத்தில் பேட்டியில் நாகசைதன்யாவிடம் விவாகரத்து பற்றிய செய்திகளைப் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த நாக சைதன்யா சினிமா வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு எனக் கூறியுள்ளார். மேலும் அம்மா அப்பா இருவரும் வீட்டிற்கு வந்தால் சினிமாவை பற்றி பேசமாட்டார்கள். இதனை தான் நானும் பின்பற்றி வருகிறேன் என கூறியுள்ளார்.

இதன்மூலம் சமந்தாவிற்கு நாக சைதன்யாவிற்கும் இடையே எந்த ஒரு கருத்து வேறுபாடு இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் சமந்தா விவாகரத்தை பற்றி செய்திகள் வெளியாகி வருவதால் இதனை நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண இருப்பதாக கூறியுள்ளார்.

விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபரீதம்.. விழி பிதுங்கி நிற்கும் கமல்!

தமிழ் சினிமாவிற்கு உலக நாயகனாக கருதப்படும் கமலஹாசன் நடிக்கும் அடுத்த படம் விக்ரம். இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை ...