நாசமா போயிடுவ, மண்ணை வாரி சாபம் விட்ட கோபியின் அம்மா.. அதிரடி டுவிஸ்ட் உடன் பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இதில் கோபியை கோர்ட்டுக்கு வர சொல்லிவிட்டு எழிலுடன் பைக்கில் பாக்யா செல்கிறார். இந்நிலையில் இனியா தனது அம்மா, அப்பா பிரிவதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். மேலும் கோபியின் அம்மா ஈஸ்வரி பாக்யா மீது கடும் கோபத்தில் உள்ளார்.

ஆனால் கோபியின் அப்பா பாக்கியா பக்கம் தான் நிற்கிறார். தற்போது பாக்யாவின் மாமியார் ஆவேசத்துடன் ராதிகா வீட்டிற்கு நியாயம் கேட்பதற்காக செல்கிறார். இந்நிலையில் கோபி பாக்யாவின் துணிச்சலை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். ஆனாலும் பாக்கியாவிடமிருந்து விவாகரத்தை கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில் விவாகரத்து வழக்கு கோர்ட்டுக்கு வந்த நிலையில் நீதிபதி பாக்கியாவிடம் விவாகரத்திற்கு சம்மதமா என்று கேட்கிறார். உடனே பாக்யா தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் இருந்தால் இந்த உலகில் வாழ ஆயிரம் வழி இருக்கிறது என்று சொல்லிவிட்டு, நான் இந்த விவாகரத்திற்கு சம்மதிக்கிறேன் என்று கூறுகிறார்.

இதனால் நீதிபதியும் கோபி, பாக்யா இருவருக்கும் விவாகரத்து அளிக்கின்றார். இந்நிலையில் ஈஸ்வரி ராதிகா வீட்டுக்கு சென்று குடும்பத்தார் உடைச்சிட்டு, நீ மட்டும் நல்லா இருப்பியா, நாசமா போயிடுவேன் என்று மண்ணை வாரி இறைக்கிறார். இதனால் ராதிகா நிலைகுலைந்த போகிறார்.

மேலும் வெளிநாடு செல்வதற்காக கிளம்பி இருந்த நிலையில் தற்போது கோபி அம்மாவின் இந்த செயலால் ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் பாக்யா குடும்பத்தை நாசம் செய்ய வேண்டும் என்பதற்காக ராதிகா வில்லியாக மாற வாய்ப்புள்ளது.

அது மட்டுமல்லாமல் தற்போது கோபிக்கு விவாகரத்து கிடைத்து விட்டதால் சுலபமாக ராதிகாவை திருமணம் செய்து கொள்ளலாம். இதனால் ராதிகாவும் கோபியை திருமணம் செய்து கொண்ட அதே வீட்டிற்கு வந்து வாழவும் அதிக வாய்ப்புள்ளது. இதனால் பல அதிரடி திருப்பங்களுடன் இந்த வார பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

எவ்வளவு பெரிய கொம்பனாலும் இதை பண்ண முடியாது.. துணிச்சலுடன் பதிலளித்த தனுஷ்

தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம், மாறன், ஹாலிவுட்டில்  தி கிரே மேன் மற்றும் பாலிவுட்டில் அட் ராங்கி ரே எனும் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் ...