விஜய் தெலுங்கில் பிரபல இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டனர். இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இத்தகவலை வைரலாகி வருகின்றனர். அதே நேரம் ஒரு கெட்ட செய்தியும் வைரலாகி வருகிறது.

ஆனால் சமீப காலமாக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இருவருக்கும் இடையே ஒரு சிறிய பிரச்சினை இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக தங்களுக்குள் இருந்த பிரச்சினையை கூறினார்.

ஆனால் பத்திரிக்கையில் எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டியில் விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபாவிற்கும் சண்டை ஏற்பட்டதாக வெளியிட்டுள்ளனர்.

அதுவும் நானும் ஷோபாவும் விஜய் வீட்டு வாசலில் காரில் காத்திருந்ததாகவும் அதனை பார்த்து விட்டு விஜய் ஷோபாவை மட்டுமே உள்ளே அனுமதித்துள்ளதாகவும், அதனால் இருவருமே திரும்பி வந்துவிட்டதாகவும் எழுதியுள்ளனர்.

மேலும் எனக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை இருப்பது உண்மைதான். ஆனால் விஜய் அவங்க அம்மாவை நன்றாக பார்த்து வருவதாகவும், அவரிடம் பேசி வருவதாகவும் அவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லை அன்பாக தான் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் விஜய் நான் ஷோபனா மூவரும் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறோம் வேறு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார்.