நறுக் மீசையில் புது பொலிவுடன் ஏ ஆர் ரகுமான்.. மீச வச்ச குழந்தையப்பா!

தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்திற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினர் என்று தான் கூற வேண்டும் முதல் படத்தில் தன் திறமையின் மூலம் அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்தார். அதன் பிறகுஏ ஆர் ரஹ்மான் பாலிவுட் தளத்திற்கு சென்று அங்கும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில்கூட இளையராஜா ஒரு பாடல் எப்போது இசையமைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை அப்பாடல் கேட்கும்போது இப்போதுதான் இசையமைத்தது போல் இருக்க வேண்டும் என தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதற்கு சிஷ்யனான ஏ.ஆர்.ரஹ்மான் லைக் செய்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்திய சினிமாவில் பிஸியாக இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தனது இசையை கொடுத்து வருகிறார். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக தனது இசை பயணத்தை தொடர்ந்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது கருத்துக்களையும் தெரிவித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவார் இப்படியிருக்கும்போது தற்போது ஏ ஆர் ரஹ்மான் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் மீசையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும்இப் புகைப்படத்தில் கை கீழ் ஜோன் ஆஃப் லைஃப் செயலி மூலம் இப்படம் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார் தற்போது ரசிகர்கள் மீசையுடன் ஏஆர் ரகுமான் ஆக இருப்பதாகவும் ஒரு சில ரசிகர்கள் மீசை இல்லாமல் இருந்தால் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும் கூறி வருகின்றனர்.

லாஜிக்கே இல்ல, காமெடியை மலைபோல் நம்பி ஹிட்டான 7 படங்கள்.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குமடா சாமி

சினிமாவைப் பொருத்தவரை ரசிகர்கள் பலருக்கும் பல விஷயங்கள் பிடிக்கும் ஒரு சில ரசிகர்களுக்கு காமெடி பிடிக்கும் மற்ற சில ரசிகர்களுக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதற்காகத்தான் இயக்குனர்கள் பலரும் படத்தில் ஆக்ஷன் காமெடி என இரண்டும் ...