நயன்தாரா மீது நம்பிக்கை இழந்த விக்னேஷ் சிவன்.. அதிரடியாக எடுத்த முடிவால் அதிர்ந்துபோன கோலிவுட்

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். அவர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவான கூழாங்கல் திரைப்படம் தற்போது பல விருதுகளை பெற்று வருகிறது.

இத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தத் திரைப்படத்தையும் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

தற்போது விக்னேஷ் சிவன் தன் தங்கையை பங்குதாரராக வைத்து ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவை நம்பாமல் தனது சொந்த முயற்சியில் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தெரிகிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து சொந்த தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகையில் விக்னேஷ் சிவன் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கி இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் திருமண அறிவிப்பை எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் இந்த செய்தியால் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் சண்டை என்று யூகித்து வருகின்றனர்.

எப்படியாச்சும் ஹிட் கொடுக்கனும்.. இளம் இயக்குனரை தூக்கிய ரஜினி

தனக்கென தனி ஸ்டைல் மற்றும் நடை மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிக்க தொடங்கிய ஆரம்பம் முதல் தற்போது வரை ரஜினிக்கான ரசிகர் ...