நயன்தாரா மார்க்கெட்டை பிடிக்க ஆசைப்படும் பிரபலம்.. அந்தப் படம் வெளிவந்தால் என் லெவலே வேற!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஹன்சிகா இணைந்து நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஹன்சிகா நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, அரண்மனை போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா. ஒரு கட்டத்தில் ஹன்சிகாவிற்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது. 2018 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் இணைந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார்.

அதன் பிறகு ஹன்சிகா நடித்த எந்த படங்களும் வெளியாகவில்லை. இப்போது மஹா என்ற படத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இது ஹன்சிகாவின் 50வது படம் என்பதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

இந்நிலையில் பலரும் ஹன்சிகா மார்க்கெட்டை இழந்து விட்டார் என கூறி வருகிறார்கள். இதனால் ஆவேசம் அடைந்த ஹன்சிகா, மார்க்கெட் இல்லை என்று யார் சொன்னது, படம் ரிலீஸ் ஆகல அவ்வளவுதான் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சின்ன நடிகர்களுடன் எல்லாம் நடிக்க மாட்டேன் நடித்தால் மாஸ் ஹீரோக்களுடன் மட்டும் தான் நடிப்பேன் என கூறியுள்ளாராம்.

விஜய் ஆண்டனி உடன் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஹன்சிகாவிடம் கேட்டால் இவர் யாரென்றே தெரியாது என்று கூறிவிட்டாராம். என்னுடைய மஹா படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் என்னுடைய கால்ஷீட்டுக்காக க்யூவில் தான் நிக்கணும் என நயன்தாராவுக்கே டப் கொடுக்கும் ரேஞ்சுக்கு அகந்தையுடன் சொல்லி உள்ளார் ஹன்சிகா.