இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரும் நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றால் அது மிகையாகாது. சமந்தாவும் நயன்தாராவும் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்கள் பல நடித்துள்ளனர். மேலும் பல மொழி படங்களிலும் நடித்துள்ளனர். இருவரும் அவருக்கு அவர்களுக்கென தனி ஒரு நடிப்பு பாணியை கொண்டவர்கள்.

தற்போது இருபெரு அழகு தேவதைகளும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இதனால் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது என்றுதான் சொல்லவேண்டும் . காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் தான் சமந்தா நயன்தாரா கூட்டணி.

நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒன்று சேருகிறது. இதில் சமந்தாவும் இணைகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாராவும் சமந்தாவும் சகோதரிகளாக நடிப்பார்கள் என்று தோன்றுகிறது. இருவரும் படப்பிடிப்பு தளத்தில் ஒரே மாதிரியான புடவை கட்டிய புகைப்படம் வெளியானதுமே இவ்வாறு ஒரு யூகம் வந்துள்ளது.

மேலும் இது ஒரு முக்கோண காதல் கதையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போதைய இப்புகைப்படம்சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது