வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாநாடு. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளார்கள். மாநாடு படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார்.

சிம்புவின் ஈஸ்வரன் படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் மாநாடு படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

மாநாடு படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்து பல மொழிகளில் வெளியிட உள்ளது. மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பிறகு நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று படத்தின் மியூசிக் ஆல்பத்துடன் படத்தின் இரண்டாவது டிரைலரை மாநாடு படக்குழு வெளியிட்டது. இந்த ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, சிம்பு, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள். சிம்பு மாநாடு இசை வெளியீட்டு விழா

இளையராஜாவுக்கு எப்படி காதலுக்கு மரியாதை கம்பேக் கொடுத்ததோ அதேபோல் மாநாடு படம் யுவன் சங்கர் ராஜாவுக்கு மிக பெரிய கம்பேக் கொடுக்கும் என ஆடியோ லான்ச்சில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

மாநாடு படத்தின் டிரைலரை பார்த்து கொட்டும் மழையிலும் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நயன்தாரா பிறந்தநாளன்று சிம்பு, மாநாடு படத்தின் ஆடியோ லான்ச்சை வெளியிட்டுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மீண்டும் நயனின் ராசி சிம்புக்கு கை கொடுக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.