நயன்தாராவுடன் இணைந்த கவின்.. வித்தியாசமாக வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித்திரையில் களமிறங்கிய நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனை அடுத்து சமீபத்தில் வெளியான லிப்ட் படம் கவினுக்கு மேலும் புகழ் சேர்த்தது. அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான லிப்ட் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய படத்தில் கவினுக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதுவரை வெறும் வார்த்தையாக மட்டும் கூறி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கும் இப்படத்திற்கு ஊர்க்குருவி என தலைப்பு வைத்துள்ளனர். நடிகர் கவினுக்கு இப்படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடமும், விக்னேஷ் சிவனிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் அருண் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக இப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவின் தவிர படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. ஊர்க்குருவி படத்தின் படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கவின் தற்போது ஆகாஷ்வாணி என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போ தான் சீரியல் சூடு பிடிக்கிறது.. கோபியின் மனைவியாக பாக்யாவை எதிர்கொண்ட ராதிகா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா தான் தன்னுடைய மனைவி என்பதை ராதிகாவிடம் குடிபோதையில் செல்போனில் இருக்கும் புகைப்படத்தை ஆதாரமாகக் காட்டி ஒட்டுமொத்த உண்மையையும் கோபி அவிழ்த்து விட்டான். இதனால் நொறுங்கிப் போன ராதிகா ...