நயன்தாராவால் பறிபோன படவாய்ப்பு.. சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல்

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் AK62 படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் தான் முதலில் தயாரித்து இருந்தது. அதன் பிறகு அதனை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது.

ஆனால் நயன்தாரா தான் ரூட்டை மாற்றி வைக்க விக்னேஷ் இடம் அந்த படத்தை கொடுத்ததாக தெரிகிறது. இப்போது சன் பிக்சர்ஸ் அஜித்தை வைத்து படத்தை எடுக்கும் ஒரு பெரிய ஆசையில் இருக்கிறது. அதற்கு இப்பொழுது சிறுத்தை சிவா வித்திட்டு வருகிறார்.

சிறுத்தை சிவா சன் பிக்சர்ஸ் வைத்து அஜித்திற்காக அடுத்த படத்தை தயார் செய்து கொண்டிருக்கிறார். இதில் அஜித் கேட்கும் சம்பளத்தை சன்பிக்சர்ஸ் கொடுத்து விட்டால் அடுத்த படம் ரெடி.

ஏற்கனவே நயன்தாராவை வைத்து இழந்ததை இப்பொழுது பிடிக்கும் முனைப்பில் இருக்கிறது சன் பிக்சர்ஸ். ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் சிறுத்தை சிவா இயக்கி, சன் பிக்சர்ஸ் தயாரித்து  நயன்தாரா ஜோடியாக கதாநாயகியாக நடித்து எதிர்பார்த்த அளவு வசூலை பெற்றுத் தரவில்லை.

எனவே அந்த கூட்டணி மீண்டும் கைகோர்த்து ரஜினிக்கு பதில் அஜித்தை கதாநாயகனாக போட்டு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்த படத்தை எடுக்க சிறுத்தை சிவா பிளான் போட்டு வருகிறார்.

இதில் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் அஜித்துக்கு மட்டும் அவர் கேட்கும் சம்பளத்தை சன்பிக்சர்ஸ் கொடுக்க தயார் என்றால், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை அடுத்து சிறுத்தை சிவா உடன் அஜித்-நயன்தாரா-சன் பிக்சர்ஸ் கூட்டணியில் அடுத்த படம் ரெடி.