நயனுக்காக விக்னேஷ் சிவனையே ஓரங்கட்டிய அட்லி.. சின்ன மீனை போட்டு சுறாவை பிடிக்க திட்டம்

பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்றால் அந்த நடிகைகள் குறைந்தது 25 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 30 வயது தாண்டி விட்டாலே அந்த நடிகைகளுக்கு மார்க்கெட் சரிந்து விடும். நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் இதற்கு சற்று விதிவிலக்கானவர்கள்.

30 வயதை தாண்டிய போதிலும் அவர்கள் இன்னும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்கள். இதைப்போன்று ஹிந்தி திரையுலகில் ஒரு விசேஷம் இருக்கிறது. அது என்னவென்றால் அங்கு 30 வயதிற்கு மேற்பட்ட நடிகைகள் தான் நீண்ட காலம் முன்னணியில் இருந்துள்ளார்கள்.

ஹேமமாலினி, ஸ்ரீதேவி போன்ற ஹீரோயின்களுக்கு 30 வயது தாண்டிய பிறகு தான் அங்கு அதிக படவாய்ப்புகளும், புகழும் கிடைத்தது. இதனால் தமிழ் சினிமாவில் 30 வயதைத் தாண்டி விட்ட நடிகை நயன்தாராவை இந்தியில் பிரபல நடிகையாக மாற்ற வேண்டும் என்று அட்லி முயற்சி செய்து வருகிறார்.

நயன்தாராவுக்கும், அட்லிக்கும் இடையே ஒரு சகோதர பாசம் உண்டு. அட்லி அவரை தன்னுடைய சொந்த அக்காவாகவே நினைப்பவர். அட்லீ தற்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறார்.

இதனால் அட்லி மும்பையில் உள்ள பிரபல சினிமா கம்பெனிகளிடம் நயன்தாராவை பற்றி கூறியிருக்கிறார். அவர்களும் நயன்தாராவிற்கு புது பட வாய்ப்புகளை தருவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 12 படங்கள் நயன்தாராவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

நயன்தாரா ஹிந்தியில் திரைப்படங்களில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் கையில் இருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டு சீக்கிரம் திருமணம் செய்து செட்டில் ஆகலாம் என்று நினைக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இப்படி புது படங்களை ஒத்துக் கொள்கிறார் என்ற கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் புது படங்களை பற்றிய பேச்சு வார்த்தையை நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் பேசிக் கொள்ளுமாறு அந்த ஏஜென்சி கம்பெனிகளுக்கு தெரிவித்துள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் அந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி கட் பண்ணி விடுகிறாராம்.