நம்மள வயிறு குலுங்க சிரிக்க வச்ச கைப்புள்ளக்கு நடந்த சோகம்.. வடிவேலு சார் நீங்க கிரேட்

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த், வடிவேலு மற்றும் பலர் நடித்த திரைப்படம் வின்னர். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை தான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த படத்தில் வடிவேலு கைப்புள்ள என்னும் கதாபாத்திரத்தில் இடுப்பை வளைத்து ஒரு காலை தாங்கி நடித்திருப்பார்.

வித்தியாசமான பாடி லாங்குவேஜில் அவர் நடித்த இந்தப் படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. படத்தின் காமெடிக்காக வடிவேலு இவ்வாறு நடித்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனால் வடிவேலு மானஸ்தன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் அவரது காலில் காயம் ஆனது.

இதனால் வீட்டில் முழு ஓய்வில் அவர் இருந்தார். அப்போது இயக்குனர் சுந்தர் சி  வடிவேலுவிடம் வின்னர் திரைப்படத்தின் கதையை கூறியுள்ளார். தன் காலில் அடிபட்டு உள்ளதால் என்னால் எப்படி நடிக்க முடியும் என்று வடிவேலு தயங்கி உள்ளார்.

அதற்கு சுந்தர் சி படத்தின் முதல் சீனில் உங்களுக்கு காலில் அடிபடுவது போல் காட்டி விடலாம், பின்னர் நீங்கள் நொண்டி நடந்தாலும் தவறாக தெரியாது என்று கூறியுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட வடிவேலு உடனே பல விதமாக நடந்து காட்டியுள்ளார்.

அதில் ஒன்றை தேர்வு செய்த சுந்தர் சி படத்தில் அப்படி நடக்குமாறு கூறியுள்ளார். அதன்பின் வடிவேலு வின்னர் படத்தில் நடித்தார். வின்னர் படத்தில் வடிவேலுவின் நடைக்குப் பின்னர் இப்படி ஒரு கதை இருந்ததாக இயக்குனர் சுந்தர் சி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.மேலும் வடிவேலு கால் உடைந்த நிலையிலும் அற்புதமான நகைச்சுவை கொடுத்ததற்காக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை வளைத்துப் போட்ட கமல்.. அரசியலின் ஆணிவேரை ஆட்ட போகும் படம்

2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை என்ற தன்னுடைய ஒரே படத்தின் மூலம் மண்ணுளிப் பாம்பு, ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என மக்களை ஏமாற்றும் நபர்களின் உத்திகளை தோலுரித்துக் காட்டி தமிழ் ...