நன்றி மறந்த தனுஷ்.. அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள் என அசத்திய சிம்பு

லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பல படங்களுக்கு மேனேஜராக பணியாற்றியவர் கிருஷ்ணகாந்த். அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி தயாரிப்பாளராக மாறினார். இவர் தயாரித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது.

தனுஷ், சாயாசிங் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டான திருடா திருடி படத்தை கிருஷ்ணகாந்த் தயாரித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் தனுஷை ஒரு முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்திய படமும் இதுதான்.

அதேபோல் சிம்புக்கு திருப்புமுனையாக அமைந்த மன்மதன் படத்தையும் இவர்தான் தயாரித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததால் இப்படத்தின் மூலம் வெற்றி தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றார் கிருஷ்ணகாந்த்.

இதுதவிர கிங், புதுப்பேட்டையில் இருந்த சரவணன், மச்சி போன்ற பல படங்களை கிருஷ்ணகாந்த் தயாரித்துள்ளார். இவர் 2020 இல் மாரடைப்பு காரணமாக தன்னுடைய 52 வயதில் உயிரிழந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் சந்திரகாந்த், உதயகாந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தன் படத்தை தயாரித்த கிருஷ்ணகாந்த் மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்திற்கு லீசுக்கு வீடு வாங்கி தந்துள்ளார். இதைத்தொடர்ந்து மன்மதன் 2 படம் எடுத்த பிறகு சிம்பு அவரது குடும்பத்திற்கு சொந்தமாக வீடு வாங்கி வருவதாக வாக்குக் கொடுத்துள்ளார்.

தற்போது கிருஷ்ணகாந்த் இன் குடும்பம் சாலிகிராமத்தில் இருந்து வேறு வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த வீடு சிம்புதான் வாங்கி கொடுத்துள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் சிம்பு தன் தயாரிப்பாளர் இறந்த பிறகும் அவர் குடும்பத்திற்கு செய்யும் நன்றிக் கடனை தனுஷ் செய்ய தவறிவிட்டார் என்பது ரசிகர் மத்தியில் வருத்தம் அளிக்கிறது.