நன்றியை மறந்த விஜய் சேதுபதி, தனுஷ்.. முதுகெலும்பாய் செயல்பட்டவருக்கே இந்த நிலமை

கோடம்பாக்கமே நேற்று படை திரண்டு ஒரு கல்யாணத்திற்கு சென்றது. அது சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச்செழியன் வீட்டு இல்ல திருமண விழா. ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களும் கலந்து கொள்ளத் தவறவில்லை. கிட்டத்தட்ட மொத்த தமிழ் திரையுலகமே மதுரையில் காணப்பட்டது.

ஆடம்பரமாக நடந்த இந்த திருமண விழாவில் கிட்டத்தட்ட 15,000 பத்திரிக்கைகள் வழங்கப்பட்டது. அப்படி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் கல்யாணத்தில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருப்பார்கள்.

இந்த கல்யாணத்திற்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய், அஜித் வரவில்லை. இவர்கள் இருவரும் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. அன்புச்செழியன் அவர்களால் பயனடைந்த விஜய் சேதுபதி மற்றும் தனுஷூம் கூட வரவில்லையாம்.

அன்புச்செழியன் தயாரித்த படம் ஆண்டவன் கட்டளை. அந்த படத்தில் நடித்தவர் விஜய் சேதுபதி. இவருக்காக பல உதவிகள செய்துள்ளார் அன்புச் செழியன். அதுமட்டுமின்றி விஜயசேதுபதியின் 96 பட பிரச்சனையையும் தீர்த்து வைத்ததும் இந்த மதுரை அன்புதான்.

இவர் தனுசுகாககவும் பல உதவிகளை செய்துள்ளார். அவருக்காக பல கோடி ரூபாயை கடனாக கொடுத்து உதவியுள்ளார். இப்படி மொத்த சினிமா வட்டாரங்களுக்கும் பல உதவிகளைச் செய்த அன்புச்செழியன் மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்தும் விஜய் சேதுபதியும், தனுஷூம் போகவில்லை.

மொத்த கோடம்பாக்கமும் சென்ற திருமணத்திற்கு இவர்கள் இருவரும் செல்லாமல் இருப்பது நன்றி மறந்த செயல் என மொத்த கோடம்பாக்கமும் பேசி வருகிறது.