நண்பன் படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்கயிருந்த பிரபல நடிகர்.. 10 வருடங்களுக்கு பிறகு வெளியான உண்மை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நண்பன். இப்படத்தில் விஜய்யின் நடிப்பு அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

அதுவும் இப்படத்தில் விஜய் கல்லூரியில் சேட்டை செய்யும் மாணவராக நடித்தது அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. மேலும் படத்தில் காட்சிக்கு காட்சி காமெடியில் அசத்தி இருப்பார். இப்படம் வெளிவந்த போது விஜய்க்கும், ஷங்கருக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஷங்கர் விஜய்யை வைத்து தொடர்ந்து படங்களை இயக்குவார் என தகவல்கள் வெளியாகின.

ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தெலுங்கில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தெலுங்கு ஹீரோக்களில் டாப் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

முதன்முதலில் ஷங்கர் மகேஷ்பாபுவிடம் நண்பன் படத்தின் கதையை கூறியுள்ளார். அப்போது பேச்சுவார்த்தையின்போது படத்தில் நடிக்க மகேஷ்பாபு மறுத்துள்ளார். ஆனால் சமீபத்தில் இயக்குனர் சீனு வைட்லா நண்பன் படத்திற்கு பதிலாக மகேஷ் பாபு தனது இயக்கத்தில் வெளியான தூக்குடு படத்தில் நடித்ததாக கூறியுள்ளார்.

மேலும் அப்போது படத்தின் கதையை பற்றி மகேஷ் பாபுவிடம் கூறியதாகவும் கதையை கேட்டு மகேஷ்பாபு வியந்ததாகவும் கூறினார். மேலும் படத்தின் வசனங்களை கேட்டுவிட்டு இப்படத்தில் நான் நடிக்கிறேன் என கூறியது மட்டுமில்லாமல் மகேஷ் பாபு தன் மனைவி நர்மதாம்விடம் ஷங்கர் படத்தில் நடிக்கவில்லை என தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் அந்த அளவிற்கு தன் மீது அவர் நம்பிக்கை வைத்ததாகவும் மேலும் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியும் இன்றும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார்.