நட்பை வைத்து ஹிட்டடித்த 10 படங்கள்.. நண்பன்ல ஏதுங்க நல்லவன், கெட்டவன்

தமிழ் சினிமாவில் பல கதைகள் கொண்டு படங்கள் வெளியாகிறது. ஆனால் நட்பை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் ரசிகர் மத்தியில் அதிக கவனம் பெறுகிறது. அவ்வாறு நட்பை வைத்து ஹிட்டடித்த டாப் 10 படங்களை பார்க்கலாம்.

புது வசந்தம்: விக்ரமன் இயக்கத்தில் 1990 இல் வெளியான திரைப்படம் புது வசந்தம். இப்படத்தில் சித்தாரா, முரளி, ஆனந்த், பாபு, ராஜா, சார்லி ஆகியோர் நடித்திருந்தனர். ஆணும், பெண்ணும் நட்பாக இருக்க முடியும் என உணர்த்திய படம் புது வசந்தம். இப்படம் 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

தளபதி: மணிரத்தினம் இயக்கத்தில் 1991 இல் வெளியான திரைப்படம் தளபதி. மகாபாரத கதையில் கர்ணன், துரியோதனன் நட்பை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. நட்புனா என்னனு தெரியுமா. .நண்பன்னா என்னன்னு தெரியுமா என்ற வசனம் மிகவும் பிரபலம். இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

வானமே எல்லை: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1992 இல் வெளியான திரைப்படம் வானமே எல்லை. இப்படத்தில் ஆனந்த்பாபு, ரம்யா கிருஷ்ணன், பானுப்பிரியா, பப்லு பிரித்திவிராஜ், ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். ஐந்து இளைய நண்பர்கள் பல்வேறு காரணங்களால் வாழ்க்கை இனி வாழ தகுதியற்றது என முடிவெடுக்கிறார்கள். பின்பு அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.

பிரண்ட்ஸ்: விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில் 2001 இல் வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். சிறுவயது முதலே நட்பாக இருக்கும் மூவரும் ஒரு கட்டத்தில் பிரிகின்றனர். பின்பு இவர்களை நட்பு எப்படி சேர்த்து வைக்கிறது என்பதே பிரண்ட்ஸ் படத்தின் கதை.

புன்னகை தேசம்: தருண், குணால், சினேகா, தாமு, பிரீத்தா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் 2002 இல் வெளியான திரைப்படம் புன்னகை தேசம். இப்படத்தில் நட்புக்காக காதலையே இலக்க நினைக்கும் நண்பனின் கதை. புன்னகை தேசம் படம் மிகப் பெரிய ஹிட்டானது.

பாய்ஸ்: ஷங்கர் இயக்கத்தில் பரத், சித்தார்த், நகுல், ஜெனிலியா, விவேக் மற்றும் பலர் நடிப்பில் 2003 இல் வெளியான திரைப்படம் பாய்ஸ். கல்லூரி படிக்கும் ஐந்து நண்பர்கள் இசை மூலம் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே படத்தின் கதை. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சென்னை 600028: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 இல் வெளியான திரைப்படம் சென்னை 600028. ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நாடோடிகள்: சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009 இல் வெளியான திரைப்படம் நாடோடிகள். இப்படத்தில் சசிகுமார், விஜய் வசந்த், பரணி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் மையக்கரு உன் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன். இப்படம் நட்புக்காக எதையும் இழக்க தயாராக இருக்கும் நண்பர்களின் கதை.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 2012ல் வெளியான திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தால் தன் காதலியே மறக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி குடும்பத்துக்கு இது தெரியாமலே
திருமணத்தை முடித்து வைக்கிறார்கள் அவரது நண்பர்கள்.

நண்பன்: ஷங்கர் இயக்கத்தில் 2012ல் வெளியான திரைப்படம் நண்பன். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் கல்லூரி நண்பர்களாக உள்ளனர். ஒரு கட்டத்தில் விஜய் இவர்களை விட்டு பிரிகிறார். பல வருடங்களுக்குப் பிறகு மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதே நண்பன் பட கதை. இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.