நட்பின் துரோகத்தால் விழுந்த பிரியங்கா.. பிரிந்த பிக் பாஸ் கூட்டணி வீடியோ!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பிரியங்கா மற்றும் அபிஷேக் இருவரையும் நேற்று நன்றாக வறுத்து எடுத்து விட்டார் நம் ஆண்டவர்.

அதன் தாக்கமோ என்னவோ இன்று பிரியங்கா கொதிப்பின் உச்சத்தில் இருப்பார் போல. இன்றைக்கான புரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது அதில் பிரியங்கா, நிரூப்பிடம் கார சாரமாக வாக்குவாதம் செய்கிறார்.

அதாவது பிரியங்காவிடம் இருந்த நாணயத்தை நிரூப் எடுத்து வைத்துக் கொண்டார் போல் தெரிகிறது. அதற்காக பிரியங்கா இதுதான் உண்மையான நட்பா என்று சண்டையிடுகிறார்.

அவர்கள் இருவரையும் அபிஷேக் சமாதானம் செய்ய முயல்கிறார். ஆனாலும் அடங்காத பிரியங்கா, நிரூப்பிற்கு நட்பை பற்றி கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே முந்தைய எபிசோடில் பிரியங்கா, நிரூப் ஆம்லெட்டை தனக்கு கொடுக்காமல் அண்ணாச்சிக்கு கொடுத்த பொழுதும் இதையேதான் கூறினார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாள் பிரியங்காவிடம் இருந்த கலகலப்பு தற்போது எங்கே சென்றது என்றே தெரியவில்லை.

மேலும் அபிஷேக்கின் சதியில் பிரியங்கா விழுந்து விட்டார் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஷங்கர் மீது கடும் கோபத்தில் இளையராஜா.. ஆசைப்பட்டவருக்கு கிடைத்த அல்வா

உலக சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். இவர் பல கோடி ரூபாய் பொருட்செலவில் அந்தக் காலத்திலேயே மிகவும் பிரம்மாண்டமாக நம் கற்பனைக்கு எட்டாத பல காட்சிகளை வைத்து திரைப்படங்களை இயக்கியவர். ...
AllEscort