நடுராத்திரியில் வெளியாகும் வலிமை டீசர்.. திடீரென டிரெண்டான அஜித்

அஜித் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்காக ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் சிங்கிள் அப்டேட்டிற்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி வந்த நிலையில் அதிரடியாக படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது.

இருப்பினும் படம் எப்போது வெளியாகும் என்பதை ரசிகர்கள் அனைவரின் ஒரே கேள்வியாக உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

எனவே விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் குறித்த தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், திடீரென வலிமை டீசர் குறித்த ஹேஷ்டேக் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும் வலிமை படத்தின் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளதாக அஜித் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இதுவரை படக்குழுவினர் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என கூறுகின்றனர். அதே சமயத்தில் முன்னதாக வலிமை படத்தின் புரமோஷன்கள் அனைத்தும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளிவந்ததால் டீசரும் அதேபோல் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதில் எது உண்மை என்பது தெரியவில்லை. எது எப்படியோ எங்களுக்கு டீசர் வந்தால் போதும் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு படத்திற்காக எவ்வளவு நாள் தான் காத்திருப்பது எனவும் அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அஜித் ரசிகர்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அஜித் அடுத்த படம் இவருடன்தான்.. உறுதியான தகவல்! அப்பனா மாஸ் பன்ச்க்கு பஞ்சம் இருக்காது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்க பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் வலிமை படம் ...