நடிப்பையும் தாண்டி அரவிந்த்சாமி எடுக்க போகும் ரிஸ்க்.. ஆனா அதுல காசு கம்மியா வருமே

சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த அரவிந்த்சாமி அதன்பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு சில காலம் விலகியிருந்தார். அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் மோகன் இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்தில் வில்லனாக ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு வாங்கிக் கொடுத்தது அதன் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி மற்றும் புலனாய்வு போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது மலையாளத்தில் வெளியான ‘கானே கானே’ திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இப்படத்தை அரவிந்த்சாமி தமிழில் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அரவிந்த்சாமி நடிகராகவும் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என கூறி வருகின்றனர்.

அரவிந்த்சாமி நடிகராக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். ஆனால் இப்படத்தின் வெற்றியை வைத்துதான் இவர் இயக்குனராக வெற்றி பெறுவாரா மாட்டாரா என்பதை முடிவு செய்ய முடியும. தற்போது அரவிந்த்சாமி படத்தை இயக்குவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.

கணவரை தவறாக பேசிய நபர்.. கோபத்தில் கொந்தளித்து VJ அஞ்சனா வெளியிட்ட பதிவு

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலில் விஜேவாக பணியாற்றியவர் தான் அஞ்சனா. இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலையின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தொகுப்பாளியாக வலம் வந்த அஞ்சனா கயல் ...