நடிப்பைத் தாண்டி பாடகராகவும் தூள் கிளப்பும் சித்தார்த்.. அட இத்தனை பாடல்களா.!

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகர் தான் சித்தார்த் சூரிய நாராயணன். தனது நடிப்புத் திறனை அற்புதமாக வெளிக்காட்டி ஒரு முன்னணி தமிழ் நடிகராக வலம் வந்தவர். இவரை ஒரு ஆக்டர் ஆக மட்டும் தான் நமக்குத் தெரியும், ஆனால் இவர் ஒரு சிறந்த பாடகர். மேலும் பல சூப்பர்ஹிட்டான பாடல்களைப் பாடியும் அசத்தி உள்ளார்.

இவர் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆக்டர் சித்தார்த் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத்திறமை கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளார்.

இவர் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள், சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின்  ‘அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் ‘ பாடல், எனக்குள் ஒருவன் படத்தின் ‘பிரபலமாகவே பிறந்த ஆளட, புதிய பாதையை திறக்கிறேன்’ என்னும் பாடல்.

தரமணி படத்தின் ‘உன் பதில் வேண்டி, யுகம் பல தாண்டி’ என்னும் பாடல் என பல ஹிட்டான பாடல்களைப் பாடி நடிகர் சித்தார்த் ரசிகர்களின் மனதை வருடியுள்ளார். இவருடைய குரலில் வெளிவந்த பாடல்கள் பலவும் இன்று வரை ரசிகர்களின் ரிங்டோன் ஆக மாறியுள்ளது.

மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் பல பாடல்களை பாடி கலக்கி வருகிறார். அத்துடன் சில நடிகர்களுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார். பல திறமைகளைக் கொண்ட நடிகர் சித்தார்த் பின்னணிப் பாடகராக மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

மேலும் இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவ்வாறு திரை உலகில் பல்வேறு கோணங்களில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்துக்கொண்டே இருக்கும் சித்தார்த்  ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

2 மில்லியன் தாண்டிய கலாச்சாரத்திற்கு எதிரான மகிழினி வீடியோ.. கௌரி நீங்க ரொம்ப மோசம்

லெஸ்பியன் தன்பாலின ஈர்ப்பை மையப்படுத்தி வெளியாகி இருக்கும் ஆல்பம் மகிழினி. ஆண், பெண் மேல் ஈர்ப்பு ஏற்படுவதும் பெண், ஆண் மேல் ஈர்ப்பு ஏற்படுவதும் இயல்பு தான். ஆனால் பிறக்கும்போதே உடலியல் ரீதியாக ஏற்படும் ...