தனுஷ் நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தமிழ் தாண்டி தற்போது இந்தி மற்றும் தெலுங்கு என அனைத்து மொழியிலும் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பை தாண்டி பன்முகத் திறமை கொண்டவர்.

பாடல் பாடுவது, பாடல் எழுதுவது மற்றும் இயக்குவது மற்றும் தயாரிப்பது என அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் படங்கள்தயாரித்ததன் மூலமும் சில விருதுகளை வாங்கினார்.

நடிகர்கள் பொருத்தவரை படங்கள் நடிப்பது தாண்டி தயாரிப்பதற்கு அதிக கவனம் செலுத்துவார்கள். அதற்கு காரணம் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவதன் மூலம் அதற்கான வருமானம் பெரிய அளவில் இருக்கும். மேலும் இதன் மூலம் லாபமும் அதிகமாக இருக்கும் என்பதால் தாங்கள் நடிக்கும் படங்கள் மற்றும் மற்ற நடிகர்களின் படங்களை தயாரிப்பார்கள்.

அப்படித்தான் தனுஷ் பல படங்கள் தயாரித்தார். அதில் ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தாலும் ரஜினிகாந்த் நடித்த காலா மற்றும் சில படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்தன. இதனால் தனுசுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.

தொடர்ந்து பல படங்களை தயாரித்து வந்த தனுஷ் இப்படத்திற்கு பிறகு எந்த படங்களையும் தயாரிக்க வில்லை. அதற்கு காரணம் இந்த படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்திற்காக தற்போதுவரை அந்த கடனை அடைத்து வருகிறார்.

அதனால் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் எந்த படங்களும் தயாரிப்பதில்லை. ஆனால் தற்போது தனுஷ் பிஸியாக நடித்து வருவதால் கூடியவிரைவில் படங்களை தயாரிப்பார் என அவரது நெருங்கிய நண்பர்கள் கூறி வருகின்றனர்.